செய்திகள்
பள்ளிகளுக்கு விடுமுறை

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2021-11-08 04:28 GMT   |   Update On 2021-11-08 04:28 GMT
கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய, விடிய பெய்தது.

குறிப்பாக சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர், ஆனைமடுவு, ஏற்காடு கரியகோவில் காடையாம்பட்டி, தம்மம்பட்டி, மேட்டூர், எடப்பாடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

இதே போல நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், கொல்லிமலை உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News