செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறப்பு

Published On 2021-11-07 13:51 IST   |   Update On 2021-11-07 15:30:00 IST
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளதால், அதன் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: 

செம்பரம்பாக்கம் ஏரியின் முழுக் கொள்ளளவு 25.55 அடி உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு தற்போது 21.45 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 1,590 கனஅடியாக உள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

2-வது மதகில் இருந்து முதல் கட்டமாக 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. ஏரி திறப்பில் ஆட்சியர் ஆர்த்தி, அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளதால், அதன் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Tags:    

Similar News