செய்திகள்
சிவகாசி அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது
சிவகாசி அருகே கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது மதுரை திருநகர் சாந்தி நகரை சேர்ந்த முகமதுசல்மான்கான் (வயது 24) என்பவர் 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.