செய்திகள்
கைது

கீரனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2021-11-02 18:29 IST   |   Update On 2021-11-02 18:29:00 IST
கீரனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:

கீரனூர் போலீசார், நார்த்தாமலையை அடுத்த சமத்துவபுரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பொம்மாடிமலையை சேர்ந்த ஜமீஸ்(வயது 41) உள்பட 5 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.310 மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News