செய்திகள்
கொள்ளை

சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொள்ளை முயற்சி

Published On 2021-11-02 15:57 IST   |   Update On 2021-11-02 15:57:00 IST
சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி.யில் பதிவான மர்மநபரை தேடி வருகின்றனர்.
தென்காசி:

சங்கரன்கோவில்- ராஜபாளையம் மெயின்ரோட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் ஊழியர்கள் அனைவரும் பணியை முடித்துவிட்டு மாலை வீடு திரும்பினர்.

நேற்று காலையில் வந்து பார்த்தபோது அங்கிருந்த ஒரு அறையின் கதவு திறந்து கிடந்தது. அறை சீல் வைக்கப்பட்டு இருந்த நிலையில், அது திறக்கப்பட்டு இருந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றதும், பொருட்கள் இருக்கிறதா என்று தேடி பார்த்ததும் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி.யில் பதிவான மர்மநபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News