செய்திகள்
சூளகிரி அருகே விவசாயியை தாக்கியவர் கைது
சூளகிரி அருகே விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சேட்டு (40). 2 பேரும் உறவினர்கள். இவர்களுக்கிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று சீனிவாசனை, சேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேட்டுவை கைது செய்தனர். மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.