செய்திகள்
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

வத்திராயிருப்பில் சாலை, குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் - ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

Published On 2021-10-29 14:15 GMT   |   Update On 2021-10-29 14:15 GMT
வத்திராயிருப்பில் சாலை, குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிந்து முருகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர்கள் வசந்தகுமார், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ரேகா வைரகுட்டி, ஒன்றிய பொறியாளர் ஜெயா, தீபக்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், மேலாளர்கள் சர்குணம், பாண்டீஸ்வரன், பாலமுருகன், பூங்கொடி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் 11 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 31 மன்ற பொருள்கள் தீர்மானமாக வைக்கப்பட்டு அவை அனைத்தும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் ஒன்றியக்குழு தலைவர் சிந்து முருகன் பேசுகையில், அதிகாரிகளும், ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்து ஆலோசனை செய்து நமது ஒன்றியம் அனைத்து வகைகளிலும் முன்னேற்றம் அடைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். அதன்பின்னர் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கூறும் போது, அரசு திட்டங்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். அதோடு தங்கள் வார்டுகளுக்கு தேவையான வாருகால், குடிநீர், தொகுப்பு வீடுகள் மற்றும் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.பின்னர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என ஒன்றிய தலைவர் உறுதி அளித்தார்.
Tags:    

Similar News