செய்திகள்
கைது

விருதுநகரில் மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம்- 23 பேர் கைது

Published On 2021-10-27 15:47 IST   |   Update On 2021-10-27 15:47:00 IST
விருதுநகரில் மனமகிழ் மன்றத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.97 ஆயிரத்து 330-ஐ பறிமுதல் செய்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் எட்டூர் வட்டம், சோதனைச்சாவடி அருகே சென்றபோது, அங்குள்ள மனமகிழ் மன்றத்தில் சிலர் காசு வைத்து சூதாடுவது தெரியவந்தது.

இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். சாத்தூர் அமீர்பாளையத்தைச் சேர்ந்த மாரீஸ்வர கண்ணன் (வயது 42) என்பவர் மனமகிழ் மன்றத்தை நடத்துவது தெரியவந்தது.

போலீசார் மேலும் விசாரணை நடத்தி மாரீஸ்வர கண்ணன், மாரிமுத்து (42), சின்னத்தம்பி (48), மேட்டமலை ஆனந்தராஜ் (45), கண்ணன் (50), ராஜூ (52), கார்த்திகேயன் (46), கணேசன் (40), மாடக்கண்ணு (55), காளிதாஸ் (45), ஜெயகண்ணன் (47), சோமசுந்தரம் (50), கணேஷ்பாபு (47), பாண்டி (33), மணி (31), கருப்பசாமி (42), செய்யது உசேன் (36), குருசாமி (33) உள்பட 23 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.97 ஆயிரத்து 330-ஐ பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News