செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 5,180 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 6 ஆயிரத்து 358 பேரில், இதுவரை 5 ஆயிரத்து 180 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 6 ஆயிரத்து 336 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை 2 லட்சத்து 61 ஆயிரத்து 932 பேருக்கும், 2-ம் தவணை 66 ஆயிரத்து 403 பேருக்கும், இதேபோல் கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணை 24 ஆயிரத்து 210 பேருக்கும், 2-ம் தவணை 11 ஆயிரத்து 510 பேருக்கும் என மொத்தம் 3 லட்சத்து 64 ஆயிரத்து 55 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 6 ஆயிரத்து 358 பேரில், இதுவரை 5 ஆயிரத்து 180 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 ஆயிரத்து 702 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.