செய்திகள்
கொள்ளை

ஈரோட்டில் ஜவுளி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கொள்ளை

Published On 2021-09-20 08:58 IST   |   Update On 2021-09-20 08:58:00 IST
ஈரோட்டில் ஜவுளி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஈரோடு:

ஈரோடு திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 40). காடா துணி வியாபாரி. இவருடைய நிறுவனத்தின் அலுவலகமும், ஜவுளி குடோனும் ஈரோடு சேட் காலனி அகில் மேடு 3-வது வீதியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் விற்பனையை முடித்துவிட்டு அலுவலகம் மற்றும் குடோனை தொழிலாளர்கள் பூட்டி சென்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை ஜவுளி நிறுவனத்திற்கு தொழிலாளர்கள் சிலர் வந்தனர். அப்போது குடோனின் பின்புற கதவு (அதாவது ஷட்டர்) பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அலுவலகத்தினுள் இருந்த பீரோ, மேஜையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

மேலும் மேஜையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.10 லட்சத்தை காணவில்லை. அதை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. முகேஷ்குமார் அலுவலகத்திலும், சுற்றுப்புற பகுதிகளிலும் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Similar News