செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தலைஞாயிறில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம்

Published On 2021-09-03 15:29 IST   |   Update On 2021-09-03 15:29:00 IST
தலைஞாயிறு பேரூராட்சியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை செயல்அலுவலர் குகன் தொடங்கி வைத்தார்.
வாய்மேடு:

தலைஞாயிறு பேரூராட்சியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை செயல்அலுவலர் குகன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தி.மு.க. பேரூர் பொறுப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் தலைஞாயிறு பஸ் நிலையம், சின்னக்கடை தெரு, அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் வர்த்தக சங்க தலைவர் பால் முருகானந்தம், கூட்டுறவு சங்க தலைவர் பிரபாகரன், தி.மு.க. நிர்வாகிகள் வீரக்குமார், வீரசேகரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி எழுத்தர் குமார் நன்றி தெரிவித்தார்.

Similar News