செய்திகள்
கைது

திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய 3 பேர் கைது

Published On 2021-09-02 02:18 IST   |   Update On 2021-09-02 02:18:00 IST
திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே தானிப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம் மகன் கருப்பையா என்ற சரவணன் (வயது45). இவரது ஆடு 2 நாட்களுக்குமுன் திருடு போனது. இதனால் ஆடு திருடு போனது குறித்து கருப்பையா விசாரித்து வந்தார். அப்போது திருக்கோஷ்டியூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் ரோட்டில் ஆறுமுகம் தோப்பு அருகில் சிலர் ஆடுகளை மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் கருப்பையா புகார் செய்தார். போலீசார் விசாரணையில், திருக்கோஷ்டியூர் ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பிச்சன் மகன் வீரன் (32), மாதவன் மகன் ராமன் (38), சின்னக்கருப்பன் மகன் மூர்த்தி (31) ஆகியோர் கருப்பையாவின் ஆடு மற்றும் ஊத்துப் பட்டியை சேர்ந்த அழகம்மை என்பவரது ஆடுகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி கைது செய்து 3 ஆடுகளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தார்.

Similar News