செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஆலங்குடி அருகே குளவாய்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-09-01 16:39 IST   |   Update On 2021-09-01 16:39:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் நளினி பாரதி முன்னிலை வகித்தார்.

கோவேக்சின் 32, கோவிஷீல்டு 92 என மொத்தம், 124 பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். இவர்கள் அனைவருமே 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆண்கள், பெண்கள் அனைவருமே சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் தங்கியிருந்த பின்னர் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் நளினி பாரதி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பிஸ்கட், பால் வழங்கினார். முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வீரம்மாள் முத்தையா, கிராம நிர்வாக அலுவலர் உலகநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Similar News