செய்திகள்
போலீசார் விசாரணை

ரூ.20 கோடி மதிப்புள்ள திமிங்கலம் உமிழ்நீர் பறிமுதல்- 3 பேரிடம் விசாரணை

Published On 2021-08-19 10:22 GMT   |   Update On 2021-08-19 10:23 GMT
தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கீரிஸ் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுக்க கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் தெர்மல்நகர் பகுதியில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இன்று காலை அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு இடத்தில் 20 கிலோ எடையுள்ள மெழுகு போன்ற பொருட்கள் மறைந்து வைத்திருப்பது தெரியவந்தது. அங்கிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த உசேன், தூத்துக்குடி கே.டி.சி. நகரை சேர்ந்த பெரியசாமி, தருவைகுளத்தை சேர்ந்த பிரபாகரன் என்பதும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய ‘அம்பர்கிரீஸ்’ என்பதும் தெரியவந்தது.

இது இந்தோனோசியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் மதிப்புடையது என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 20 கோடி ஆகும்.

இது 1972 வனஉயிரின பாதுகாப்பு சட்டம் அட்டவணை 2-ன் கீழ் வகைப்படுத்தப்பட்டது. இது தடை செய்யப்பட்டது. இந்த அம்பர் கிரீஸ் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் ஒரு வகையான பொருளாகும்.

பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கீரிஸ் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்த ‘அம்பர்ஸ்கிரீஸ் ’எங்கிருந்து எடுக்கப்பட்டது?. எங்கு கொண்டு செல்ல செல்ல திட்டமிட்டனர்?. இதில் தொடர்புடையவர்கள் யார்-யார்? என விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News