செய்திகள்
கோப்புபடம்

பல்லடத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2021-08-19 15:35 IST   |   Update On 2021-08-19 15:35:00 IST
சம்பவத்தன்று இரவு தங்கராஜ் தனது மனைவி கிருத்திகா மற்றும் மகன், மகளுடன் வீட்டைப் பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றார்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உகாயனூர் ஊராட்சி குருநாதம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). இவர் சிறிய அளவில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். 

சம்பவத்தன்று இரவு மனைவி கிருத்திகா மற்றும் மகன், மகளுடன் வீட்டைப் பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றார். இந்த நிலையில் தங்கராஜின் தம்பி சந்தோஷ் (33) அண்ணன் வீட்டிற்கு சில பொருட்களை எடுக்க சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோ திறந்து துணிகள் சிதறி கிடந்தன.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் உடனே தங்கராஜ்க்கு தகவல் கொடுத்தார். அவர் கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த கம்மல் மற்றும் தங்ககாசு உள்ளிட்ட 2 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் சுற்று வட்டாரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எனவே கொள்ளையை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News