செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்.

இலவச குடியிருப்பு-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்

Published On 2021-08-19 15:19 IST   |   Update On 2021-08-19 15:19:00 IST
மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் இலவச குடியிருப்பு வழங்க மனுக்கள் பெறப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக பிரதிவாரம் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கு மனு பெட்டி வைத்து மனுக்கள் பெறப்பட்டு வந்தது. 

தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வருவதை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களது குறைகளை தொலைபேசி மூலம் தெரிவிக்க சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக (0421-2969999) என்ற தொலைபேசி எண்ணிற்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தெரிவிக்கலாம் எனவும்,மக்களிடமிருந்து வரப்பெறும் குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நிவர்த்தி செய்திடும் வகையில் விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் பொதுமக்கள் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் இலவச குடியிருப்பு வழங்க மனுக்கள் பெறப்பட்டது.

இதையொட்டி மாற்றுத்திறனாளிகள், விதவைப்பெண்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் இன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு அளிக்க குவிந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Similar News