செய்திகள்
ஆதார் சேவை - தபால் அலுவலகத்தில் குவியும் பொதுமக்கள்
கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே தலைமை தபால் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் பொதுமக்கள் தங்களது ஆதார் உள்ளிட்ட தபால் சேவையை பூர்த்தி செய்து வந்தனர்.
இந்தநிலையில் கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான பேர் தலைமை தபால் அலுவலகம் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று ஆதார் திருத்தங்கள் செய்ய அலுவலகம் திறப்பதற்கு முன்பே பொதுமக்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது வரிசையில் நிற்பது தொடர்பாக சிலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.