செய்திகள்
கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்.

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-08-19 14:45 IST   |   Update On 2021-08-19 14:45:00 IST
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தற்போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:

வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.25 உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் ரூ.850.50-க்கு விற்பனையான சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.25 அதிகரித்து ரூ.875.50ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தற்போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் வெள்ளியங்காடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது  கியாஸ் சிலிண்டரை பாடைகட்டி எடுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒன்றிய அரசு விலையை குறைக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News