செய்திகள்
ஊதியூர் அருகே கள்ளச்சாராயத்தை பதுக்கி விற்ற பெண் கைது
சரஸ்வதி வீட்டில் சோதனை செய்த போது அங்கு சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே உள்ள மூக்கணாங்கோட்டை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஊதியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சரஸ்வதி (வயது 49) என்பவரது வீட்டில் சோதனை செய்த போது அங்கு சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 4 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்ததுடன், சரஸ்வதியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.