செய்திகள்
சம்பள பிரச்சினை-மத்திய மந்திரியிடம் அமராவதி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மனு
திருப்பூர் வந்த மத்திய அமைச்சர் முருகனிடம் அமராவதி ஆலைத்தொழிலாளர்களின் ஒரு பிரிவினர் சம்பள பிரச்சினை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என மனு கொடுத்தனர்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பலஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு சம்பள பிரச்சினை உள்ளது. நிலுவையின்றி சம்பளம் வழங்க வேண்டும் எனவும் பழுதடைந்த எந்திரங்களை அகற்றிவிட்டு ஆலையை புதுப்பிக்க வேண்டுமெனவும் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது நான்கு மாதங்களாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளது. இந்நிலையில் திருப்பூர் வந்த மத்திய அமைச்சர் முருகனிடம் அமராவதி ஆலைத்தொழிலாளர்களின் ஒரு பிரிவினர் சம்பள பிரச்சினை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என மனு கொடுத்தனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசுவதாக மத்திய அமைச்சர் உறுதி கொடுத்துள்ளார் என்றனர்.