செய்திகள்
கைது

போஸ்டர் ஒட்டியதில் தகராறு- மதுரையில் 8 பேர் கைது

Published On 2021-08-19 11:35 IST   |   Update On 2021-08-19 11:35:00 IST
மதுரை தீர்த்தக்காடு பகுதியில் போஸ்டர் ஒட்ட எதிர்ப்பு தெரிவித்ததில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.
மதுரை:

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மதுரை தீர்த்தக்காடு பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அப்போது அவர்கள் வண்டியூரை சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டுச்சுவரிலும் போஸ்டர் ஒட்டியதாக தெரிகிறது.

இதற்கு கணேசனின் மனைவி செல்லம்மாள் (வயது 45) மற்றும் அவரது மகன் ஆகிய 2 பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே பகுதியில் வசிக்கும் சிலரும் அவருக்கு ஆதரவாக பேசினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது 4 பேர் கும்பல் உருட்டுக்கட்டையால் தாய்-மகனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக செல்லம்மாள் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை சமத்துவபுரம் மருதுபாண்டி (வயது 26), வண்டியூர் குருசாமி மகன் செந்தில் (20), பால்பாண்டி (27), மாந்தோப்பு அன்னை வீதி சக்திவேல் பாண்டி மகன் பாண்டீஸ்வரன் என்ற புறா பாண்டி (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இதேபோல் மருதுபாண்டி கொடுத்த புகாரின்பேரில் தீர்த்தக்காட்டைச் சேர்ந்த கணேசன் மகன் முத்துப்பாண்டி என்கிற முத்துக்காளை (23), பாண்டிமணி (20), பாண்டிய ராஜன் (25), வேலுச்சாமி மகன் பாண்டித்துரை (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.


Similar News