செய்திகள்
பாடாலூர் அருகே விபத்தில் வாலிபர் பலி
பாடாலூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்ரப்(வயது 35). இவர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை அடுத்துள்ள பெருமாள் பாளையத்தில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னே சென்ற வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அஸ்ரப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார், அஸ்ரபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.