செய்திகள்
பயிர் மேலாண்மை பயிற்சி

பெரம்பலூர் அருகே ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

Published On 2021-08-14 10:05 IST   |   Update On 2021-08-14 10:05:00 IST
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டனர்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சில்லக்குடி வடக்கு கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் காய்கறி பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் பண்ணைப்பள்ளி பயிற்சி நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, உழவர் பயிற்சி மைய வேளாண்மை துணை இயக்குனர் கீதா ஆகியோர் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆலத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், ரோவர் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் சதீஷ்குமார், சங்கீதா ஆகியோர் பேசினார்கள். இதில் காய்கறி பயிர் சாகுபடி செய்ய நிலம் பதப்படுத்துதல், மண் பரிசோதனை, நுண்ணூட்டம், உயிர் உரத்தின் முக்கியத்துவம், இயற்கை முறை சாகுபடி மற்றும் விதை நேர்த்தி செய்வது போன்ற தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகள் விளக்கிக் கூறினார்கள்.

இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டனர்.

Similar News