செய்திகள்
விபத்து பலி

அரக்கோணம் அருகே பஸ் மீது கார் மோதி முதியவர் பலி

Published On 2021-08-10 21:39 IST   |   Update On 2021-08-10 21:39:00 IST
அரக்கோணம் அருகே பஸ் மீது கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 68). இவரது மனைவி சியாமளா. இவர்கள் இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக காரில் வந்து கொண்டிருந்தனர். நேற்று மாலை அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூர் அருகே வந்தபோது முன்னால் சென்ற பஸ்சின் பின்பகுதியில் மோதியது. இதில் காரில் இருந்த நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் சியாமளா மற்றும் கார் டிரைவர் சதிஷ் ஆகியோர் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News