செய்திகள்
நெமிலி அருகே சூதாடிய 2 பேர் கைது
நெமிலி அருகே சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:
பனப்பாக்கத்தை அடுத்த நெடும்புலி கிராமம் திரவுபதி அம்மன் கோவில் அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பனப்பாக்கம் திருமால்பூர் ரோட்டு தெருவை சேர்ந்த ஜபாஷி (வயது 60), அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த ரமேஷ் (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.