செய்திகள்
புதுவையில் கொரோனாவுக்கு பெண் பலி
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 831 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 489 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று 6 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 96, காரைக்காலில் 25, ஏனாமில் 6, மாகியில் 7 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 151, காரைக்காலில் 23, ஏனாமில் 13, மாகியில் 43 பேர் என 230 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 203, காரைக்காலில் 28, ஏனாமில் 1, மாகியில் 13 பேர் என 255 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 831 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 489 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் ஆயிரத்து 62, காரைக்காலில் 196, ஏனாமில் 21, மாகியில் 64 பேர் என ஆயிரத்து 343 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது ஆயிரத்து 573 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
காரைக்காலில் 68 வயது பெண் சிகிச்சை பலனினின்றி இறந்தார். இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது.