செய்திகள்
கோப்புபடம்

ஈரோடு அருகே வேன் திருடிய வாலிபர் கைது

Published On 2021-07-04 15:48 IST   |   Update On 2021-07-04 15:48:00 IST
ஈரோடு அருகே வேன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன்நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29). பழைய இரும்பு வியாபாரி. கடந்த 1-ந் தேதி இரவு கார்த்திக் தனது சரக்கு வேனை கருங்கல்பாளையம் பழைய போலீஸ் நிலையம் அருகில் நிறுத்தி வைத்து இருந்தார். நேற்று முன்தினம் அவர் சென்று பார்த்தபோது சரக்கு வேனை காணவில்லை.

இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சரக்கு வேனை திருடிச்சென்றது ஈரோடு புதுமை காலனியை சேர்ந்த கருப்புசாமி (30) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கருப்புசாமியை போலீசார் நேற்று கைது செய்து, சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.

Similar News