செய்திகள்
சேத்துப்பட்டு அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை
தாய் அம்பிகா கீழேவிழுந்து அடிபட்டுவிட்டதால் மனமுடைந்த வாலிபர் வீட்டில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் ஆத்தூரை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா. மகன் பிரகாஷ்ராஜ் (வயது 22). திருவண்ணாமலையில் நடந்த உறவினர் திருமணத்திற்கு பிரகாஷ், அவருடைய தாய் அம்பிகாவை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார்.
திரும்பி வரும்போது திருவண்ணாமலையில் வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியபோது பின்னால் இருந்த அம்பிகா கீழே விழுந்து விட்டார். இதில் காயம் அடைந்த அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, பிரகாஷ்ராஜ் ஆத்தூரை கிராமத்துக்கு வந்தார்.
தாய் அம்பிகா கீழேவிழுந்து அடிபட்டுவிட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.