செய்திகள்
வந்தவாசி, படவேட்டில் கொரோனா தடுப்பூசி முகாம்
வந்தவாசி அருகே காரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதியான் தலைமையில் நடைபெற்றது.
வந்தவாசி:
வந்தவாசி அருகே காரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதியான் தலைமையில் நடைபெற்றது.
வழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரம்யா தலைமையிலான குழுவினர் முகாமிற்கு வந்தவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, பிராண வாயு பரிசோதனை செய்த பிறகு தடுப்பூசி போட்டனர்.
கண்ணமங்கலம் அருகே படவேடு வீரகோவில் திடலில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் தாமரைச்செல்விஆனந்தன் முன்னிலை வகித்தார். முகாமில் காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் ராமு, தமிழரசன் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு 124 பேருக்கு தடுப்பூசி போட்டனர். முடிவில் ஊராட்சி செயலர் அண்ணாச்சி நன்றி கூறினார்.