செய்திகள்
வேலூரில் வாலிபர் தூக்கிட்டு பலி
வேலூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை, நல்லான்பிள்ளை 2-வது தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 31). இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வேலைக்கு போகாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டுள்ளார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அய்யப்பன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.