செய்திகள்
தற்கொலை

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2021-06-29 14:33 IST   |   Update On 2021-06-29 14:33:00 IST
மோகன்ராஜ் செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஆரணி:

ஆரணி கொசப்பாளையம் தாண்டவராயன் தெருவைச் சேர்ந்த ரவிசங்கரின் மகன் மோகன்ராஜ் (வயது 29). இவரின் பெற்றோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர். மோகன்ராஜ் செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அவர், தற்போது சின்னபட்டுநூல்காரர் தெருவில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். திருமணமாகாத ஏக்கம் மற்றும் பெற்றோர் இல்லாத வருத்தம் போன்ற காரணங்களால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று காலை வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News