செய்திகள்
தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்ற காட்சி

தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு:ரூ.10¾ லட்சம் காணிக்கை வசூல்

Published On 2021-06-23 03:13 GMT   |   Update On 2021-06-23 03:13 GMT
தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியலில் 40 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி மற்றும் அமெரிக்க டாலர் 20, பக்ரைன் தினார் 1 ஆகியனவும் காணிக்கையாக பெறப்பட்டு இருந்தது தெரியவந்தது.
சிதம்பரம்

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் நேற்று சிதம்பரம் சரக ஆய்வாளர் நரசிங்கப் பெருமாள் தலைமையில், உதவி ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது.

தொடர்ந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 10 லட்சத்து 83 ஆயிரத்து 448 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 40 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி மற்றும் அமெரிக்க டாலர் 20, பக்ரைன் தினார் 1 ஆகியனவும் காணிக்கையாக பெறப்பட்டு இருந்தது தெரியவந்தது. இப்பணியின் போது, கோவில் பணியாளர்கள் வாசு, ராமலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News