செய்திகள்
அர்ச்சகர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிவாரணத்தொகை வழங்கியகாட்சி.

அர்ச்சகர்கள் உள்ளிட்ட 132 பேருக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை

Published On 2021-06-21 07:35 GMT   |   Update On 2021-06-21 07:35 GMT
கொரோனா கால நிவாரண உதவித்தொகையாக அர்ச்சகர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
காங்கயம்:

திருப்பூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் நிலையான மாத ஊதியமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்கள் உள்ளிட்ட 642 பேருக்கு ரூ.33.38 லட்சம் மதிப்பீட்டில் கொரோனா கால நிவாரண உதவித் தொகையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் தொடக்க விழா காங்கயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு காங்கயம் பகுதியில் உள்ள கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்ட 132 பேருக்கு முதல்கட்டமாக தலா ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், கணேச மூர்த்தி எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் வெங்கடேஷ், வட்டாட்சியர் சிவகாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News