செய்திகள்
கொரோனா சிகிச்சை மையத்தை கவர்னர் திறந்து வைத்தார்

பல்கலைக்கழகத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையம்- கவர்னர் திறந்து வைத்தார்

Published On 2021-06-19 03:58 GMT   |   Update On 2021-06-19 03:58 GMT
சின்னகாலாப்பட்டு, பெரியகாலாப்பட்டு, பிள்ளைச்சாவடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காலாப்பட்டு:

புதுவை பல்கலைக்கழகத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கினார். கவர்னரும், பல்கலைக்கழகத்தின் தலைமை காப்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

இந்த மையத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் 60 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சின்னகாலாப்பட்டு, பெரியகாலாப்பட்டு, பிள்ளைச்சாவடியில் தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பல்கலைக்கழக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விழாவில் ஆய்வுகள், கல்வி கண்டுபிடிப்பு மற்றும் கிராமப்புற புனரமைப்பு இயக்குனர் பாலகிருஷ்ணன், கலாசார மற்றும் கலாசார உறவுகள் இயக்குனர் ராஜீவ் ஜெயின், பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் சித்ரா, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், சுகாதாரத்துறை செயலர் அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News