செய்திகள்
பாசி மணிகள்

கீழடியில் பாசி மணிகள் கண்டுபிடிப்பு

Published On 2021-06-15 03:20 GMT   |   Update On 2021-06-15 03:20 GMT
கீழடியில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளும்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய பாசி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம்:

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றும் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கிறது.

அகழ்வாராய்ச்சியின்போது கீழடியில் ஏற்கனவே தாயக்கட்டை, பாசி மணிகள், சேதமுற்ற நிலையில் சிறிய, பெரிய பானைகள், மற்றும் காதில் அணியும் தங்க ஆபரணம் இதேபோல் கொந்தகையில் முதுமக்கள் தாழி, மனித மண்டை ஓடு, மற்றும் பல்வேறு எலும்புகள் பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் நேற்று கீழடியில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளும்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய பாசி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும்போது இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்கும் என தெரிய வருகிறது.
Tags:    

Similar News