செய்திகள்
காய்கறிகள்

விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழங்களை தடையின்றி விற்க நடவடிக்கை- கலெக்டர் தகவல்

Published On 2021-05-29 11:27 GMT   |   Update On 2021-05-29 11:27 GMT
கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழங்கள் தடையின்றி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழங்கள் தடையின்றி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்ய நகர்ப்புறங்களுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்/ தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் இதுகுறித்த சந்தேகங்களுக்கு பஞ்சு பேட்டையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த விவசாயிகள் உதவி மையம் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை 044- 27222545 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News