செய்திகள்
சோழிங்கநல்லூரில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு அபராதம்
ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
சோழிங்கநல்லூர்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் வருகிற 31-ம் தேதி வரை தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியில் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
சோழிங்கநல்லூர், குமரன் நகர், செம்மஞ்சேரி சென்னை எல்லை, சோதனைச் சாவடி போன்ற இடங்களில் போலீசார் வாகன சோதனையில் சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.