செய்திகள்
கோப்புப்படம்

காஞ்சீபுரம் நகராட்சியில் கூடுதல் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்க நடவடிக்கை

Published On 2021-05-27 18:21 GMT   |   Update On 2021-05-27 18:21 GMT
காஞ்சீபுரம் பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருள்கள் விற்பனை செய்ய நடமாடும் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருள்கள் போன்றவை விற்பனை செய்ய 88 நடமாடும் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில் பெரு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப காய்கறிகள் கிடைக்கவில்லை என பெருநகராட்சி நிர்வாகத்திற்கு் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் 88 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள், மளிகைபொருள்கள் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக 40 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள், மளிகை் பொருள்கள் விற்பனை செய்ய பெரு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் வைத்து நடமாடும் வாகனங்களுக்கு காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள், பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

இதுகுறித்து பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியதாவது:-

விவசாயிகள், மொத்த வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கி செல்ல, நடமாடும் வாகன வியாபாரிகள் அதிகாலை 5 மணிக்கே வந்து காய்கறிகள், பழங்களை வாங்கி சென்று பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதேபோல் பெரு நகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ள விலைப்பட்டியலை தவிர கூடுதல் விலைக்கு காய்கறிகள், பழங்களை விற்பனை செய்யக்கூடாது என அவர் வியாபாரி களை கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News