செய்திகள்
கொரோனா தொற்றுக்கு பலியான அரசு ஆஸ்பத்திரி நர்சின் தாயாரும் உயிரிழப்பு
கொரோனா தொற்று காரணமாக மகளும், தாயாரும் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் சாலைப்பேட்டையைச் சேர்ந்தவர் எழிலரசி (வயது 40). குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்த இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
ஏற்கனவே அவரது தாயார் பாப்பம்மாளும் (60) கொரோனா தொற்று காரணமாக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த பாப்பம்மாளும் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மகளும், தாயாரும் அடுத்தடுத்து கொரோனாவிற்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.