செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

Published On 2021-05-23 18:34 IST   |   Update On 2021-05-23 18:34:00 IST
பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் கடவரஅள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு கோவில் அருகே சென்றபோது, அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த முத்தம்பட்டி திம்மராஜ் (வயது 22), அரவிந்த் (20), உமாசங்கர் (31) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.300-ஐ பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அஞ்செட்டி போலீசார் பாண்டுரங்கன்தொட்டி வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (33), ராஜூதயா (39), பழனி (45), ராஜீ (57), கோவிந்தன் (27) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.300-ஐ பறிமுதல் செய்தனர்.

Similar News