செய்திகள்
ஜெயங்கொண்டம் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் கலெக்டர் ஆய்வு
ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஜெயங்கொண்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 91 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு கிராமங்கள் தோறும் நடத்தப்படும் முகாம்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஜெயங்கொண்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 91 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் தற்போது 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, மின் வசதி மற்றும் கழிப்பிட வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிகளில் 100 படுக்கை வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன என்றார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்த், நகராட்சி ஆணையர் சுபாஷினி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் உஷா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.