செய்திகள்
நளினி

ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி கொரோனா நிவாரண நிதி வழங்கினார்

Published On 2021-05-19 01:40 GMT   |   Update On 2021-05-19 01:40 GMT
வேலூர் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினியும் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்துள்ளார்.
வேலூர் :

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினியும் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்துள்ளார்.

அவர் தனது சிறைவாசிகளுக்கான வைப்புநிதியில் இருந்து ரூ.5 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ருக்மணிபிரியதர்ஷினிக்கு விருப்ப மனு அளித்துள்ளார்.

இந்த மனுவை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News