செய்திகள்
கொரோனா தடுப்பூசி முகாம்

அரியலூரில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-05-18 15:03 IST   |   Update On 2021-05-18 15:03:00 IST
ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் டாக்டர் ஆனந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் 45 வயதிற்கு மேற்பட்ட 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.
ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் டாக்டர் சந்தியா ராஜலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமில் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த 50 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். சுகாதார மேற்பார்வையாளர் குழந்தைவேல், வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் நாட்டுதுரை, ஆண்டிமடம் வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் டாக்டர் ஆனந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் 45 வயதிற்கு மேற்பட்ட 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். முகாமில் ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசன், ஜாகிர் உசேன், சுகாதார ஆய்வாளர் உமாபதி மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News