செய்திகள்
கைது

மத்திகிரி அருகே சரக்கு வேன் திருடிய 2 பேர் கைது

Published On 2021-05-16 15:32 IST   |   Update On 2021-05-16 15:32:00 IST
மத்திகிரி அருகே சரக்கு வேன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா சாரகப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 44). சொந்தமாக சரக்கு வேன் வைத்துள்ளார். சம்பவத்தன்று அவர் கொத்தகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனம் முன்பு தனது சரக்கு வேனை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஜெயராமன் மத்திகிரி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் வேனை திருடியது தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கரியன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவாகர் (23), காரிமங்கலம் தாலுகா பென்னிக்கனூரை சேர்ந்த சுரேஷ் (25) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட சரக்கு வேனும் மீட்கப்பட்டது.

Similar News