செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா ஊரடங்கு குறித்து ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு

Published On 2021-05-11 13:13 GMT   |   Update On 2021-05-11 13:13 GMT
முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் புதுக்கோட்டை கடைவீதியில் கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுவதை பார்வையிட்டார்.
புதுக்கோட்டை:

முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் புதுக்கோட்டை கடைவீதியில் கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுவதை பார்வையிட்டார். முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்க நகராட்சி அதிகாரிகளுக்கு கூறினார். இலவசமாக முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். முழு ஊரடங்கை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்குமாறும், அனுமதிக்கப்பட்ட கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கூறினார். மேலும் நகராட்சி சார்பில் 11 வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் முழு ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகள், கொரோனா விழிப்புணர்வுகள் தொடர்பாக ஒலிபரப்பப்பட்டன. இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் பரக்கத், சந்திரா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News