செய்திகள்
கைது

மதுபாட்டில்கள் கடத்திய 4 பேர் கைது

Published On 2021-05-10 03:06 GMT   |   Update On 2021-05-10 03:06 GMT
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் மதுபாட்டில்களை கடத்திச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 121 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூர்:

கொரோனா தொற்று காரணமாக 2 வார முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஊரடங்கின் போது, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இந்தநிலையில், கீழச்சிவல்பட்டி பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது விராமதி பஸ் ஸ்டாப்பில் சந்தேகம்படும்படி நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசலைச்சேர்ந்த ரெங்கசாமி மகன் சுப்பிரமணியன் (வயது40) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையில் சுமார் 42 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் மதுபாட்டில்களை வாங்கி வைத்திருந்து, கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கீழச்சிவல்பட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கலையரசு வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியத்தை கைது செய்ததார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று கீழச்சிவல்பட்டி டாஸ்மாக் கடையில் 28 மதுபாட்டில்களை வாங்கிச்சென்ற ஆவினிப்பட்டியை சேர்ந்த முருகேசன் (51) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 68 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதேபோன்று 25 மதுபாட்டில்களை கடத்தி சென்ற திருப்பத்தூர் அருகே மணமேல்பட்டியை சேர்ந்த குமரேசன் (39) என்பவரையும், 28 மதுபாட்டில்களை வாங்கிச்சென்ற திருப்பத்தூர் சமஸ்கான் பள்ளிவாசல் தெருவைச்சேர்ந்த முத்து (52) என்பவரையும் திருப்பத்தூர் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி கைது செய்து விசாரித்து வருகிறார். அவர்களிடம் இருந்து 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News