செய்திகள்
திருமயம் அருகே பள்ளி மாணவி மாயம்
திருமயம் அருகே கடைக்கு சென்ற பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
திருமயம்:
திருமயம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா. கூலித் தொழிலாளி. இவரது மகள் ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து திருமயம் போலீசில் சின்னையா கொடுத்த புகாரின்பேரில், திருமயம் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.