செய்திகள்
தற்கொலை

பொன்னமராவதி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-05-04 17:05 IST   |   Update On 2021-05-04 17:05:00 IST
பொன்னமராவதி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:

பொன்னமராவதி ஒன்றியம், ஏனாதி ஊராட்சி பிடாரம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செண்பகம். இவரது மகள் ராஜாத்தி (வயது 26). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ராஜாத்தி தனது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News