செய்திகள்
கூடலூர் அருகே ஒரே கிராமத்தில் குழந்தைகள் உள்பட 16 பேருக்கு கொரோனா
தொற்று பாதித்தவர்களின் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கூடலூர்:
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தருமகிரி கிராமத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தி, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு சுகாதார பணிகளை சுகாதாரத்துறையினர் மற்றும் ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் தலைமையிலான ஊழியர்கள் மேற்கொண்டனர். அப்போது தொற்று பாதித்தவர்களின் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.