செய்திகள்
அபராதம்

வந்தவாசியில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத பேக்கரிக்கு ரூ.500 அபராதம்

Published On 2021-04-21 17:36 IST   |   Update On 2021-04-21 17:36:00 IST
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வந்தவாசி:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டாயம் முககவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வந்தவாசி பஜார் வீதியில் உள்ள ஒரு பேக்கரியில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வியாபாரம் செய்ததாக வந்தவாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் ரூ.500 அபராதம் விதித்தார். பின்பு அங்கிருந்தவர்களுக்கு முககவசம் கொடுத்து அதை அணியுமாறு போலீசார் வலியுறுத்தினர். பின்னர் நடந்து செல்லும் பொதுமக்களை முககவசம் அணிந்து செல்லுமாறு தலைமை காவலர் விஜயன், பெண் காவலர்கள் அருள் தேவி, பிரியா ஆகியோர் வலியுறுத்தினார்கள்.

Similar News